ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சில குறிப்புகள்
இரத்தம் சிவப்பாக இருக்க காரணமாக உள்ள நிறமிகள் தான் ஹீமோகுளோபின். ஹீமோகுளோபின் இரத்ததில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. இரத்ததில் உள்ள ஹீமோகுளோபினில் 96% புரதங்கள் நிறைந்துள்ளது.
ஹீமோகுளோபின் அளவு:
- ஆண்களுக்கு 100 மில்லி லிட்டர் இரத்ததில் 14 முதல் 17 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
- பெண்களுக்கு 100 மில்லி லிட்டர் இரத்ததில் 13 முதல் 15 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
- குழந்தைக்கு 100 மில்லி லிட்டர் இரத்ததில் 14 முதல் 20 கிராம் வரை ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள்:
1. பீட்ரூட்:
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மிகவும் அற்புதமான ஒன்று பீட்ரூட் மற்றும் பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. பீட்ரூட் ஹீமோகுளோபின், இரும்பு சத்துக்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகரிக்க உதவுகிறது. இரத்ததில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
2. மாதுளை பழம்:
மாதுளை பழத்தில் உள்ள இரும்பு சத்துக்கள், கால்சியம், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
3. உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்தால் ஹீமோகுளோபின் உடலில் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது.
4. மற்ற சில உணவுகள்:
காஃபி, டீ மற்றும் சில உணவுகள் இரத்ததில் இரும்பு சத்துக்கள் சேர்வதை தடுக்கிறது. இவற்றை தவிர்ப்பது நல்லது.
5. வைட்டமின் சி குறைபாடு கூட ஹீமோகுளோபின் அளவை குறைக்கும்.
No comments:
Post a Comment