முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது இந்தியா...
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:7/10/2013 10:57:36 AM3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் போர்ட் ஆப் ஸ்பெயினில் மோதின. இந்திய அணி முதலில் பேட் செய்தது. தவான் 15, கோஹ்லி 31, தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ரோகித் ஷர்மா 83 பந்தில் 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 48 ரன்னும், ரெய்னா 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் துவக்கப்பட்டது. இந்திய அணி 29 ஓவர்கள் பேட்டிங் செய்ததால் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 26 ஓவரில் 178 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் இலங்கை பேட்டிங்கை துவக்கியது. புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ்யாதவ் ஆகியோர் நேர்த்தியாக பந்து வீசி இலங்கை பேட்ஸ்மேன்களை மிரளச்செய்தனர்.
தரங்கா 6, ஜெயவர்த்தனே 11, சங்ககரா 0, சண்டிமால் 26, திரிமன்னே 0, மேத்யூஸ் 10, மென்டிஸ் 13, தில்ஹாரா 6, ஹெராத் 4, மலிங்கா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் இலங்கை அணி 24.4 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இந்திய அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புவனேஷ்வர்குமார் 4, இஷாந்த் ஷர்மா, ஜடேஜா தலா 2, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது புவனேஷ்வர்குமாருக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியால் இந்திய அணிக்கு போனஸ் புள்ளிகளும் கிடைத்தது. மொத்தம் 10 புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 9 புள்ளிகள் பெற்றிருந்த போதும் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணிக்கே இறுதி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. நாளை நடைபெறும் பைனலில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
No comments:
Post a Comment